புகைப்படங்கள்

புகைப்படங்கள்

Wednesday, November 24, 2010

நன்றி

வானம்பாடி கவிதைகள் தந்த 'களம்' சிற்றிதழுக்கு நன்றி.

Saturday, May 30, 2009

நேசிக்க

நீவேண்டும் என்றில்லை
உன்நிழல் கூட போதும்
நான்நேசிக்க.
முகம் வேண்டும் என்றில்லை
உன்மனம் கூட போதும் நான் பூஜிக்க.
எயர் (காற்று)வேண்டும் என்றில்லை
உன் பேர் கூட போதும்
நான் சுவாசிக்க.
நேசிப்பதற்காகவே சுவாசிக்கிறேன்.
சுவாசிப்பதற்காகவே நேசிக்கிறேன்.

Thursday, February 26, 2009

நட்பு!

எதிர்பாராமல்
சந்தித்தோம்எதிர்பார்த்தபடியே நட்பானோம்!
அற்ப்புதமானது நமது
நட்புஎன்னைக்குறித்துநீ பேசிய
போதுதான்எனக்கே தெரிந்ததுஎன்னை பற்றி.
ஆழ்ந்த
உணர்வுகளைஆரவாரமின்றி
பகிர்ந்து கொண்டோம்.
உறவினர்களிடம்கூட உரைக்காதசெய்திகளைஉளமார
பகிர்ந்து கொண்டோம்

நண்பர்கள் என்போர் யாவர்?
நம்பிக்கைகுரியவர?
காதலரா?
இ மெயில் தொல்லையாளர?
அழுதிடதாங்கிடும் அற்ப்புத மனிதரா?
சொல்ல சொல்ல தலையாட்டும்
தலையாட்டி பொம்மையா?
இவர்கள் யாரும் இல்லை

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத
சொற்களால் சொல்ல முடியாத
உள்ளத்தால் மட்டுமே உணரக்கூடியவர்கள்-நண்பர்கள்.
உணர்வுகளால் நிரம்பிய சொல்
நட்பு.

விலைமதிப்பற்ற வெகுமதி
சிலசமயம் சிறிய பொட்டலத்தில் கூட வரக்கூடும்!
நட்பும் அப்படித்தான்

நட்பு பாதை திறக்கப்பட்டால்
அடைக்க படுவதில்லை!
இந்த புத்தகம் (நட்பு) எழுத பட்டுக்கொண்டே இருக்கிறது.
காத்திருக்கிறது...
வாசித்து மகிழ்ந்திடவும்!

நமக்குள்ளே முரண்பாடுகள் நிறைய உண்டு.
நாம் விவாதங்களில் ஏற்ப்பட்டிருகின்றோம்
இருந்தபோதும்..என்னை நீயும் உன்னை நானும்
தளர்ந்த நேரங்களில்
தாங்கிபிடிக்க மறந்ததில்லை

நான் என் நண்பர்களிடம் பிரிந்து கிடக்கின்றேன்
நகைசுவையாலனாக
நையாண்டி மனிதனாக
வாழ்க்கை பாடமாக
கேள்வி ந்ஜானமாக
பிரிந்து கிடக்கிறேன்.

இவைகள் எல்லாமாக இருப்பது
தோழி
உன்னிடம் மட்டும்தான்

நான்-அவன்தான்!

வெயிலடித்தால் காய்கிறேன்
மழை பெய்தால் நனைகிறேன்
நான் கல்.

ஒட்டுவதும் இல்லை
உதறுவதும் இல்லை
உறவும் இல்லை
பகையும் இல்லை!
அன்பும் இல்லை
வம்பும் இல்லை.
கோயில் சிலையாக அமைய
கொடுப்பினை இல்லைஎனினும்
வாசல்படியாக அமைந்தால்கூட
தலை எழுத்தென்று
ஏற்றுகொள்வேன்.

வறுமை வெயிலும்
பெருமை மழையும்
தீண்டியதில்லை-எம்மை
சீண்டியதில்லை.

துன்பத்தை ஏற்றுக்கொள்கிறேன்
இன்பத்தை எதிர்பார்க்கிறேன்
பிறந்தவை அழியும்-அழிந்தவை பிறக்கும்
தொடங்கின முடியும் - முடிந்த இடம் தொடங்கும்

கங்கையில் நீரோட
காவிரியில் கண்நீரா ஓடும்?
காய்ந்தே கிடக்குமா ?